தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எழுவர் விடுதலை: 'நீதிமன்றம் விடுவித்தால் ஆட்சேபனை இல்லை' - கே.எஸ். அழகிரி - court acquits seven people

சென்னை: பேரறிவாளம் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றம் விடுவித்தால், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

By

Published : Nov 8, 2020, 4:17 PM IST

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு நான்கு ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது அவர் பேசுகையில், "2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அறிவித்தது. அது இந்தியாவின் கருப்பு நாள். கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே கருத்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கே.எஸ். அழகிரி

எங்கள் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால், ஒரே கோட்டில் இணைகிறோம். அதுதான் மதசார்பற்ற கூட்டணி. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அப்படி இல்லை. பேரறிவாளம் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றம் விடுவித்தால், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை அரசியல் கட்சிகள் வலிறுத்தக்கூடாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details