தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுபோதையில் வந்த 'அண்ணாத்த' ரசிகர்கள்: திரையரங்கிற்குள் விடாதால் கண்ணாடி உடைப்பு - ரோகினி திரையரங்கு

மதுபோதையில் 'அண்ணாத்த' படம் பார்க்க வந்தவர்களை அனுமதிக்காதால் ஆத்திரத்தில் திரையரங்கின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

annaatthe
annaatthe

By

Published : Nov 5, 2021, 1:09 PM IST

சென்னை: தீபாவளி கொண்டாட்டமாக ரஜினி நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம் நேற்று (நவம்பர் 4) உலகமெங்கும் வெளியானது. சென்னை ரோகினி திரையரங்கிலும் அண்ணாத்த திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த திரையிரங்கில் நேற்றிரவு 5 பேர் அண்ணாத்த படம் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததால் காவலாளி திரையரங்கிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காவலாளியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அக்கும்பல் ஆத்திரத்தில் திரையரங்கின் முகப்பில் இருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக ரோகினி திரையரங்கு மேலாளர் ராமலிங்கம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details