தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சரத்குமார் நடிப்பில் 'இரை' இணைய தொடர் - etvtamil

ராதிகா சரத்குமாரின் 'ராடான் மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் 'ஓடிடி ஒரிஜினல்ஸ்' தளத்திற்காக 'இரை' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 6) காலை பூஜையுடன் தொடங்கியது. இத்தொடரை 'தூங்காவனம், கடாரம் கொண்டான்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் M செல்வா இயக்குகிறார்.

சரத்குமார் நடிப்பில் 'இரை' இணைய தொடர் பூஜையுடன் தொடக்கம்
சரத்குமார் நடிப்பில் 'இரை' இணைய தொடர் பூஜையுடன் தொடக்கம்

By

Published : Jul 6, 2021, 11:45 AM IST

Updated : Jul 6, 2021, 11:54 AM IST

ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனமான 'ராடான் மீடியா ஒர்க்ஸ்' கடந்த பல வருடங்களாக தமிழ்நாடு பொழுதுபோக்கு துறையில், பல சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி வருகிறது. குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது. பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய இந்நிறுவனம், தற்போது ஓடிடி தளத்தில் 'இரை' எனும் இணைய தொடர் மூலம் தன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த இணைய தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஜூலை 5) எளிமையான பூஜையுடன் தொடங்கியது. 'தூங்காவனம்', 'கடாரம் கொண்டான்' படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் M செல்வா, இந்த இணையதொடரினை இயக்குகிறார். ரசிகர்களை இருக்கையின் முனையில் கட்டிப்போடும், பரபர திருப்பங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகவுள்ளது.

'இரை' இணைய தொடர்

இதுகுறித்து ராதிகா சரத்குமார் கூறியபோது, "எங்கள் 'ராடான் மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் குடும்ப ரசிகர்களின் ரசனையை முதன்மையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். கடந்த பல வருடங்களாக பொழுதுபோக்கு உலகின், பல்வேறு துறைகளில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் பல கதைகளை வழங்கி, பல அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிறுவனம், பல வித்தியாசமான படைப்புகளை இந்த தலைமுறையிலும் வழங்க, இந்த வெற்றிகள் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது.

பூஜையுடன் தொடங்கிய இணைய தொடர் இரை'

ஓடிடி தளத்தில் எங்களது அறிமுக தயாரிப்பான 'இரை' இணைய தொடர், எப்போதும்போல் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும். இந்த இணைய தொடர் க்ரைம் திரில்லர் வகையில் உருவானாலும், உறவுகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும்.

சரத்குமார் நடிப்பில் 'இரை' இணைய தொடர்

க்ரைம் திரில்லர்

சரத்குமார் டிஜிட்டல் தளத்தில் எங்கள் நிறுவனம் மூலம் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி. திரில்லர் வகை படங்களில் தன் திறமையை பெரிய அளவில் நிரூபித்து காட்டிய இயக்குநர் ராஜேஷ் M செல்வா, இந்த இணைய தொடரையும் மிக அற்புதமான படைப்பாக மாற்றுவார். நான் எப்போதும் திரைத்துறையை எனது மற்றொரு குடும்பமாகவே கருதி வந்திருக்கிறேன். இந்த கரோனா கொடிய காலத்தை கடந்து, தற்போது தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் ஒன்றிணைந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வது மிகப்பெரும் உற்சாகத்தையும், மனதிற்கு பெரும் சந்தோஷத்தையும் அளிக்கிறது" என்று கூறினார்.

பூஜையுடன் தொடங்கிய இணைய தொடர் இரை'
இயக்குநர் ராஜேஷ் M செல்வா, சரத்குமார்

இந்த இணைய தொடரில் அனைத்து வகை மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு 75 துணை நடிகர்கள்,
அரசு வழிகாட்டியுள்ள அனைத்து சுகாதார முன்னெடுப்புகளையும் கடைப்பிடித்து, இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Last Updated : Jul 6, 2021, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details