தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள் திறக்க வேண்டும்’  - வைகோ - The government should issue a notification to operate the Ambattur industrial park - Vaiko

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை இயங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் - வைகோ அறிக்கை
அம்பத்தூர் தொழிற்பேட்டை இயங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் - வைகோ அறிக்கை

By

Published : May 9, 2020, 5:43 PM IST

தமிழ்நாடு அரசு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தொழில் நிறுவனங்கள் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிய, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் பணிகளைத் தொடங்கி விட்டனர். ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை.

அவர்கள் இயங்க முடியவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் அவர்களுக்குக் கொடுத்து இருக்கின்ற உதிரி பாகங்கள் கொள்முதல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றார்கள். மற்றவர்களும், மாற்றி விடக்கூடும். அதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும். ஏற்கனவே கடந்த 45 நாள்களாக தொழில் முடக்கத்தால், பெரும் இழப்புக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

அங்கே தொழில்களை இயக்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. கரோனா பரவலைத் தடுக்க, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். இது தொடர்பாக, அம்பத்தூர் தொழிற்முனைவோர்கள் தமிழ்நாடு அரசை பலவாறு அணுகியும், இதுவரை அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை. எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும்" என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தொழில் தொடங்க அனுமதி கோரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை!

ABOUT THE AUTHOR

...view details