சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,
- 256 மருந்து தெளிப்பான்கள்,
- 167 பவர் ஸ்ப்ரே
- பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரே,
- 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள்,
- 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள்
- 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள்
ஆகியவற்றைக் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.