தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா வைரசிலிருந்து காக்க சென்னையில் தன்வந்திரி யாகம்! - கரோனா வைரஸ்

சென்னை: உலக நன்மை வேண்டியும், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடவும் தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான வெங்கடேஸ்வரா கோயிலில் தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

homam
homam

By

Published : Mar 19, 2020, 7:35 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிப்புகளில் இருந்து மீள இறைவனிடம் வேண்டினால் அதனை அவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த ஹோமம் நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் சேகர் ரெட்டி, ” கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இன்று தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதன்மூலம் பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் “ என்றார்.

இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்வதையும், அவர்களுக்கு முகக்கவசம் வழங்குவதையும் சேகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

கரோனா வைரசிலிருந்து காக்க சென்னையில் தன்வந்திரி ஹோமம்!

திருப்பதியில் வரும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தன்வந்திரி யாகம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சத்தைத் தொடர்ந்து கோயிலுக்கு வர பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், சென்னையில் இந்த யாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தொற்று - வெறிச்சோடிய தி.நகரில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details