சென்னை:தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 25 லட்சம் ரூபாய்க்கான விருது, பரிசுக்கோப்பை மாநகராட்சி ஆணையர் சுதந்திர தினத்தன்று பெற்றுக்கொள்கிறார்.
அதேபோல் சிறந்த நகராட்சிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதகமண்டலம், திருச்செங்கோடு, சின்னமனூர் ஆகியவற்றிற்கு முறையே 15 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
சிறந்த பேரூராட்சியாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி, கடலூர் மாவட்டம் மேல்பட்டபாக்கம், சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதலிடம் பெற்ற கல்லக்குடிக்கு 10 லட்சம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற மேல்பட்டபாக்கத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற கோட்டையூருக்கு 3 லட்சம் ரூபாய் எனப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: ’மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்