தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணம் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அ.ம.மு.க வழக்கறிஞர் செல்வம் நேற்று கைது செய்யப்பட்டார். தேனி சிறையில் உள்ள செல்வத்தை அமமுகவைச் சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் சந்தித்தார்.
அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்செல்வன் பேசும்போது, ‘திட்டமிட்டு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்ட வழக்கில் செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை ஜாமினில் வெளியே எடுத்து இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் எனத் தெரிவித்தார்.