தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

மின்தட்டுப்பாடு மற்றும் தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

- முன்னாள் அமைச்சர் தங்கமணி
- முன்னாள் அமைச்சர் தங்கமணி

By

Published : Jun 26, 2021, 10:58 PM IST

சென்னை : ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டு மின்சாரத்துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கை துறை அறிக்கை வழங்கியுள்ளது. ஆனால் அதில் ஊழல் நடந்து உள்ளது போல பொய்யான கருத்துக்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக மட்டுமே உள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து பொருட்களும் விலையேற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் விலையேற்றம் இல்லை. பொதுமக்களுக்கு மாதம் 100 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கினோம். இதனால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
11 லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

நீண்டகால கொள்முதல் காரணத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி வருவது பொய். திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் 31 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.

தணிக்கை துறை சார்பாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வழங்கப்பட்டது. சேவை செய்யக்கூடிய ஒரு துறையில் மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்யவே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் நேரத்தில் அந்த கடன் 45 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. தற்போது உள்ள கடனில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு கடன் மட்டுமே, பணிகள் முடியும் நேரத்தில் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

2015 ஆம் ஆண்டு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க நிறுவனங்கள் தயாராக இருந்த நிலையில், 12 ரூபாய் 77 பைசாவிற்கு ஏன் ஒப்பந்தம் போடப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த நேரத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காரணத்தாலும், குறைவான விலைக்கு ஒப்பந்தாம் வழங்க தயாராக இருந்த நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்க தயாராக இருந்ததாக கூறினார். ஆனால் தேவை அதிகமாக இருந்த காரணத்தால் ஒரு ஆண்டிற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க : தினந்தோறும் புதிய போராட்டம் - விவசாயிகளை சாடிய பாஜக அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details