தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிரியர் தகுதிச் சான்று உத்தரவை அறிவிப்பு பலகையில் வெளியிடுக!

சென்னை: மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற விவரத்தை கல்வியியல் கல்லூரிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

certificate
certificate

By

Published : Oct 22, 2020, 12:48 PM IST

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 50ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான காலக்கெடுவை ஏழு ஆண்டில் இருந்து வாழ்நாளுக்கானதாக மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர், அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ” மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தேசிய கல்வி ஆசிரியர் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு அறிவிப்பு பலகை வாயிலாக இதனை தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009இன் கீழ் ஆசிரியர்கள் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணிக்குத் தகுதிப் பெற்றவர்கள் என தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 2010ஆம் ஆண்டு அறிவித்தது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 2013, 2017, 2019ஆம் ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்கள் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டை தொடரவும்... நுழைவுத்தேர்வை நீக்கவும்...

ABOUT THE AUTHOR

...view details