கோவை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் அண்மையில் ஊடுருவியதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல் ஈராக்கிலிருந்து தப்பிய பயங்கரவாதிகளில் இரண்டு பேர் தற்போது தென்னிந்தியாவில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
தென்னிந்தியாவை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் - அதிர்ச்சி கிளப்பும் ராணுவ கமாண்டர் - கோயம்புத்தூர்
டெல்லி: தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தென்பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
shaini
இந்நிலையில், தென்பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி கூறுகையில், ’தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனை முறியடிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் கடல் பகுதியில் ஆளில்லாத சில படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன’ எனக் கூறியுள்ளார்.