தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரவல் காரணமாக மின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு! - Tneb

சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Jun 3, 2021, 2:07 AM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறு மாத காலமாக எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர் கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்புப் பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details