கரோனா பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளின் போது, சென்னை மாநகராட்சி தவிர்த்த பிற மாவட்டங்களில், ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் ஈட்டும் வழிபாட்டு இடங்களுக்கு மட்டும் ஜூலை மாதம் முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. மேலும், பக்தர்களியின்றி பூஜைகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற வழிபாட்டு இடங்களில், திருவிழாக்கள், தேரோட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன. உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றும் நிகழ்வும் முன்னெப்போதும் இல்லாத வகையில், மக்களின்றி நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (செப். 01) முதல் மாநிலம் முழுவதும் அனைத்து வழிபாட்டு இடங்களையும் திறக்க அரசு அனுமதி அளித்ததுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி, சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பொதுமக்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மீண்டும் திறக்கப்பட்ட கோயில்கள் - தனிமனித இடைவெளியுடன் மக்கள் தரிசனம் அரசு அறிவித்தபடி கோயில் வாயிலில் கைகளை கழுவுவதற்கு கிருமிநாசினி, உடல் வெப்ப சோதனை செய்வது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. மேலும், கோயில்களில் பிரசாதம் வழங்கவும், பிரகாரங்களை சுற்றவும், பக்தர்கள் கோயிலில் அமரவும் தடை இன்னும் விலக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ’ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’