தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - Temple land encroachment news

சென்னை: பெரம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலங்களை மீட்க கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
கோயில் நிலங்களை மீட்க கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

By

Published : Jan 19, 2021, 5:08 PM IST

சென்னை பெரம்பூரில் உள்ள ஆனந்தீஸ்வரர் கோயில், பழனியாண்டவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. அக்கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலங்கள் உள்ளன. ஆனால், அந்த நிலங்களும், கோயில் குளமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த நிலங்களை மீட்டு முறையாகப் பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கோ. தேவராஜன் என்பவர், கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பல்வேறு மனுக்களை கொடுத்துள்ளார்.

ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார் குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டோர் நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...தமிழ்நாடு அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details