சென்னை:கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதி பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்தது. குறிப்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்து இருந்தது. இதனை வலியுறுத்தி ஏற்கெனவே ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாழ்வாதார மாநாட்டை நடத்தியது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமை சரியான பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இடைநிலைப் பதிவு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுகவின் தேர்தல் அறிக்கை 311 நிறைவேற்றக்கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற வலியுறுத்தியும் நினைவூட்டல் போராட்டம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலைப்பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், ”தமிழ்நாட்டின் 2009 ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகள் காலமாக ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பணியை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மாநிலத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு இணையான சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படவில்லை.