தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் நேரில் சந்தித்தார்.

stalin
stalin

By

Published : Oct 6, 2021, 6:28 PM IST

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று(அக்.06) நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

டாடா குழுமம், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது. மேலும், முன்னதாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகளுக்கு டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி தர்ணா - லக்னோ விமான நிலையத்தில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details