தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! - தமிழ்நாட்டில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை
நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை மட்டும் ரூ. 426 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை(மே 10) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று (மே 8) மற்றும் இன்றும் (மே9) அனைத்து வித கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகள் நாளை முதல் விடுமுறை என்பதால் நேற்று மட்டுமே தமிழ் நாட்டில் ரூ.426 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 100 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 82 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் ரூ.87.28் கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 79.82 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 76.12 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது.
இன்றும் இதே அளவில் மதுவிற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைகளில் மதுபான விற்பனை அதிகரித்து இருப்பதால் கையிருப்பை அதிகம் வைக்க மண்டல அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.