சென்னை:தமிழ்நாடு உயர் கல்வித் துறையின் உத்தரவின்படி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான மூன்று பேரை தேர்வுசெய்ய தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித்திற்குப் பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வேந்தரின் நியமனமாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாகத் தமிழ்ப் பல்கலைக்கழகதத்தின் முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன், பல்கலைக்கழகத்தின் பேரவை நியமனமாக ஜெயதேவன், ஆட்சிமன்றக் குழு நியமனமாக பேராசிரியர் மு. செல்வம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மநாபன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் கல்வித் துறையினால் அறிவிக்கப்பட்ட தகுதியை உடையவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். துணைவேந்தராக நியமனம் செய்யப்படுவர்கள் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பர்.
உரிய தகுதியும், அனுபவமும், விருப்பமுள்ளவர்கள் www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 7ஆம் தேதிக்குள்
மருத்துவர் ஜ. ஸ்ரீவித்யா,
இணை பேராசிரியர்,
உடற்கூறியல் துறை,