சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TAMIL NADU COMMON ENTRANCE TEST - TANCET), மே 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு மே 14-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கு மே 15-ம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.
டான்செட் தேர்வுக்கு, மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பம் தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.