பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் நடந்த பொது விருந்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.
தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு - சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு - தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு
சென்னை: தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு செல்கின்ற பக்தர்களுக்கு வசதியாக, தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 250 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாக இருந்தால் அந்தந்தப் பகுதியில் இருந்து தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கிடவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: தஞ்சை கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை