இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நகர சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் புத்தாண்டு அன்று மட்டும் சென்னை நகரை வெறும் 10 ரூபாய்க்கு சுற்றலாம். நகரின் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம். சுற்றுலா வளாகத்திலிருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினாக் கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் இந்தச் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம்.