இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், இரண்டாவது முறையாக மே 3 வரை 19 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். முதல் ஊரடங்கை திட்டமில்லாமல் செய்ததன் விளைவாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் துயரத்தில் சிக்கித் தவித்ததும், பசி பட்டினியால் அவதிப்பட்டதும் அன்றாட செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள பிரதமர் மோடி, கரோனா வைரசை எதிர்கொள்ள சில அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்கியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் எதையும் பிரதமர் அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.