தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கத்தை அடுத்து கல்வியாண்டு முடியும் முன்பாகவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இறுதித் தேர்வு நடத்தப்படாமலேயே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில், கரோனாவால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு அமைத்துள்ள இக்குழுவில் கல்வியாளர்களையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் சுப்ரமணி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அரசு அமைத்திருக்கும் நிபுணர் குழுவைக் கண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதிர்ச்சி அடைகிறது. பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் கொண்ட குழுவை நிபுணர்கள் குழு என்று எப்படி ஏற்றுக் கொள்வது?