சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 609 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆயிரத்து 556 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 23 லட்சத்து 76 ஆயிரத்து 881 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 24 ஆயிரத்து 234 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 256 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.