சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப்.12) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை
14.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
15.09.2021: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
16.09.2021, 17.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.