தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மறைமுகத் தேர்தலில் அதிமுக கலந்துகொள்ளாதது அவர்களின் அரசியல் மரபு - சேகர் பாபு விமர்சனம் - chennai mayor

அதிமுக சென்னை மாநகராட்சி மறைமுகத்தேர்தலில் கலந்துகொள்ளாதது அவர்களின் அரசியல் மரபு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.

மறைமுக தேர்தலில் அதிமுக கலந்துகொள்ளாதது அவர்களின் அரசியல் மரபு - சேகர்பாபு விமர்சனம்
மறைமுக தேர்தலில் அதிமுக கலந்துகொள்ளாதது அவர்களின் அரசியல் மரபு - சேகர்பாபு விமர்சனம்

By

Published : Mar 4, 2022, 3:37 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தலின்போது சிறப்பு விருந்தினராக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேயர் பதவி ஏற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "9 மாத கால அளப்பரிய ஆட்சியால் திமுகவின் கோட்டையாக உதயசூரியன் தகத்தாயமாக உதித்தது. மேயருக்கு வடசென்னை பகுதியிலிருந்து பட்டியலினத்தைச் சார்ந்த தங்கை வந்திருப்பது, திமுகவில் தொடர்ந்து பயணித்து வரும் குடும்பத்தைச்சேர்ந்தவர் வந்திருப்பதில் பெருமை, மகிழ்ச்சி.

மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதைச் சவாலாக எடுத்துக்கொண்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவார்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பதுபோல், திசை காட்டும் மாலுமியாக அனைவருக்கும் வழிகாட்டியாக முதலமைச்சர் இருக்கிறார்கள். திறமைக்கு வயது காரணமாக இருக்காது. அதிமுக இந்த மறைமுகத் தேர்தலில் கலந்துகொள்ளாதது அவர்களின் அரசியல் மரபு. அதிமுகவை வழிநடத்துபவர்கள் பாதையில்தான் செல்கிறார்கள்.

ஜெயக்குமார் மீது வழக்குத் தொடுத்தவர் திமுகவா? இன்னார், இனியவர் என பாராமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்,

மகளிருக்கு முக்கியத்துவம் தரும் திமுக

"சென்னை மாநகராட்சி வரலாற்றில் 102 மகளிர், மாமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பு ஏற்று இருக்கிறார்கள். மகளிருக்கு முக்கியத்துவம் தரும் அரசு திமுக என்பதற்கு உதாரணம்தான் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு கொடுத்திருக்கக்கூடிய பிரதிநிதித்துவம்.

102 பெண்கள் சென்னை மாமன்ற உறுப்பினர்களாக இருப்பது மகிழ்ச்சி. 50% இட ஒதுக்கீடு மூலம் அதிகளவில் மகளிர் மாமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்று இருக்கின்றனர்.

சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் பிரியா அவர்களுக்கு வாழ்த்துகள். இன்றைய முதலமைச்சர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேம்பாலங்கள் கட்டினார். இதற்காகப் பல விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின், மேயராக இருந்தபோது பெற்றார்.

மேயராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் பிரியா, முதலமைச்சரின் வழியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், சென்னை மாநகராட்சியை மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மறைமுக தேர்தல் முடிவுகள் :சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்

ABOUT THE AUTHOR

...view details