தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

' ஸ்டாலின் ஒன்றும் காந்தியும் இல்லை; நான் ஒன்றும் புத்தனும் இல்லை ' - எகிறிய அமைச்சர் சி.வி. சண்முகம்

சென்னை: தேர்தல் ஆணையத்தை திமுக மிரட்டுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

shanmugam
shanmugam

By

Published : Dec 16, 2019, 1:48 PM IST

Updated : Dec 16, 2019, 2:41 PM IST

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக சதி செய்து, அடுத்தடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் உச்ச நீதிமன்றம் தகுந்த பதிலடியை தந்துவிட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசைப் பற்றி விமர்சிக்க திமுக தலைவருக்கு எந்தவித அருகதையும் இல்லை. தனிப்பட்டமுறையில் என்னைப் பற்றிப் பேச அவர் ஒன்றும் காந்தியும் கிடையாது, நான் புத்தனும் கிடையாது. அப்படிப் பேசிக் கொள்ள வேண்டும் என்றால் மேடை அமைத்து பேச நான் தயார். நான் ஊர் பெயர் தெரியாதவன் எனக்கூறும் முரசொலிதான் மூன்றாம் தரமானது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு நாவடக்கம் முக்கியம் ' என்று ஆவேசமாகப் பேசினார்.

சி.வி. சண்முகம், சட்டத்துறை அமைச்சர்

தொடர்ந்து, குடியுரிமைச் சட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அமைதியாகச் சென்றார்.

இதையும் படிங்க: ’சம்மட்டி அடி எங்களுக்கு இல்லை, அதிமுகவிற்கு மரண அடி’ - ஸ்டாலின் பதிலடி!

Last Updated : Dec 16, 2019, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details