சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக் கோரி அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாய் பத்மா தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.