தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க நில எடுப்புப் பணி - தமிழ்நாடு அரசு - ஜெயலலிதா

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக்க நில எடுப்பு மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

garden
garden

By

Published : May 6, 2020, 6:11 PM IST

இது தொடர்பாக வருவாய்த் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள விளம்பரச் செய்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அமைந்திருக்கும் போயஸ் தோட்டத்திலுள்ள வேதா இல்லத்தை, நினைவிடமாக மாற்ற அரசு ஒப்புதல் வழங்கி, அதற்கான நில கையகப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிலத்திற்கு அடியில் எந்தவிதமான கனிம வளங்களும், சுரங்கங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு காலமானார். சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம், அரசு நினைவு இல்லமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், சசிகலா தரப்பில் தினகரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக நிலம் கையகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details