தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1-8ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் - பள்ளிகள் திறப்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

1-8ஆம் வகுப்புகள்
1-8ஆம் வகுப்புகள்

By

Published : Sep 14, 2021, 6:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, மாநிலம் முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பங்கேற்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், " ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த வேளையில் மாணவர்களின் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளோம்.

அதோபோல பள்ளியை திறந்தால் மாணவர்கள் வருகை குறித்தும் ஆலோசித்தோம். ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். விருப்பமில்லாத மாணவர்கள் வீட்டிலேயே இருக்கலாம். இதில் மாற்றமில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயாரா?

ABOUT THE AUTHOR

...view details