தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: பள்ளியில் படிக்காமல் நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்புபவர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

public
public

By

Published : Jan 3, 2020, 4:19 PM IST

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் ஜனவரி 27 முதல் 31ஆம் தேதி வரை ’ www.dge.tn.gov.in ' என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்றும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் 175 ரூபாயை, பணமாக செலுத்தலாம். முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல், இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் “ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்.ஆர்.சி. சித்திரம் வரைந்து ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details