தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து: அரசாணை வெளியீடு - tamilnadu news

நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்துசெய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
அரசாணை வெளியீடு

By

Published : Oct 11, 2021, 2:16 PM IST

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்துசெய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம், மீத்தேன், ஹைட்ரோகார்பன், கூடங்குளம், சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய ஐந்தாயிரத்து 570 வழக்குகள் ரத்துசெய்யப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்விற்கு எதிராகப் போராடிய 446 பேர் மீது போடப்பட்ட வழக்குகளும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய 422 பேர் மீது பதியப்பட்ட வழக்குகளும் என மொத்தமாக 868 வழக்குகளை ரத்துசெய்து முதலமைச்சர் சட்டபேரவையில் அறிவித்தார்.

அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவில் 18 ஆயிரம் கோவிட் பாதிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details