தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு - சத்ய பிரதா சாகு விளக்கம்! - தபால் ஓட்டு

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு தபால் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையத்திடமிருந்து தெளிவான விளக்கம் வந்த பிறகு முடிவு எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

officer
officer

By

Published : Jan 23, 2020, 8:31 PM IST

தேசிய வாக்காளர் நாள் வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மாநில அளவிலான வினாடி வினா போட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 460 பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டியில், கோயம்புத்தூர் சி.ஐ.டி கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும், லயோலா கல்லூரி மாணவர்கள் மூன்றாம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சாகு, தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஜனவரி 25 அன்று நடக்கும் தேசிய வாக்காளர் நாள் கொண்டாட்டத்தில், தமிழக ஆளுநர் கலந்து கொள்கிறார்.

நான்கு நாள்கள் நடந்த வாக்காளர் முகாம்களில் 17 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பிப்ரவரி 14 அன்று முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டெல்லியைப் போன்று தமிழகத்தில் ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவது குறித்து தெளிவான விளக்கங்கள் தேர்தல் ஆணையத்திடமிருந்து வந்த பிறகு முடிவெடுக்கப்படும் ” என்றார்.

ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு - சத்ய பிரதா சாகு விளக்கம்

இதையும் படிங்க: திமுக வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details