தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல்முறையாக வாக்களிப்பவர்கள் முதல் முதியவர்களை வரை வாக்குச்சாவடிக்கு ஆர்வத்துடன் வந்து கோடையையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமை ஆற்றிவருகின்றனர்.
மக்களவைத் தேர்தல்; தமிழ்நாட்டில் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவு - தேர்தல் வாக்குப்பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் ஐந்து மணி நிலவரப்படி 63.73 விழுக்காடு வாக்குகள் பதிவு ஆகியுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
therdhakl
இந்நிலையில், மாலை ஐந்து மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 63.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.07 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல் புதுச்சேரியில் 67.5 விழுக்காடு பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.