தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை - சத்யபிரதா சாகு

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

By

Published : Jan 4, 2021, 1:06 PM IST

Updated : Jan 4, 2021, 2:14 PM IST

13:01 January 04

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி, பள்ளிகள் இயங்கும் நாள்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர்.

இச்சூழலில் கரோனா அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த ஆணையம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, அதுகுறித்து விளக்கமளித்தார்.

அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை எனவும் உறுதிபட தெரிவித்தார். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும்,  திட்டமிட்டபடி  ஜனவரி 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், கரோனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக தேர்தல் பணிகளில் வழக்கமாக 3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தபடும் சூழலில், 2021 தேர்தலில் நான்கு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Last Updated : Jan 4, 2021, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details