தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் நாளையுடன் ஓய்கிறது பரப்புரை - திமுக

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடிவடைகிறது.

campaign

By

Published : Apr 15, 2019, 9:07 AM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்துவரும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது. மேலும் அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. மீதம் இருக்கும் நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

அதேபோல், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் வருகிற 18ஆம் தேதி நடக்க இருக்கிறது.

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஏற்கனவே தகிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மாலை ஆறு மணிக்கு பரப்புரை ஓய்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா? என்பதைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details