தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் ஐயூஎம்எல் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

சென்னை: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

kadiyanallur constituency confirmed for IUML
இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி தொகுதி உடன்படிக்கை

By

Published : Mar 9, 2021, 10:44 AM IST

Updated : Mar 10, 2021, 2:30 PM IST

இதுதொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவாடனை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம் மற்றும் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். கடையநல்லூர் தொகுதி எங்களுக்கு உறுதியாகியுள்ளது.

மீதமுள்ள 2 தொகுதிகளில் முடிவு என்னென்ன என்பது இன்று மாலை தெரியவரும். ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் ஒன்றும், பாபநாசம், சிதம்பரம் ஆகியவற்றில் ஒன்றும் திமுக ஒதுக்கும் என நம்புகிறோம் என்றார்.

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 9 தொகுதி பட்டியலை கொடுத்து, போட்டியிட இருக்கும் 3 தொகுதிகளை இறுதி செய்ய கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து தற்போது அக்கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபாகரன் தம்பி, உங்களை நம்பி - திருவொற்றியூர் மக்களிடம் சீமான் வாக்கு சேகரிப்பு

Last Updated : Mar 10, 2021, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details