கரோனா தொற்று குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள 190 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து 5,438 பேருக்கும், பிற மாநிலம், வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய 9 பேருக்கும் என மொத்தம் 5,447 நபர்களுக்கும் கரோனா நோய்க் கிருமித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 5,524 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்!
18:38 October 07
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,447 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5,524 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றுவரை (அக்.7) 77 லட்சத்து 25 ஆயிரத்து 962 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,524 நபர்கள் குணமடைந்து இன்று வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 7) ஒரே நாளில் அதிகபட்சமாக 67 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,984ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவிற்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மாவட்ட வாரியாக இன்றைய (அக். 7) பாதிப்பு நிலவரம்
- சென்னை - 1369
- செங்கல்பட்டு -324
- திருவள்ளூர் - 252
- மதுரை- 90
- காஞ்சிபுரம் - 138
- விருதுநகர் - 37
- தூத்துக்குடி - 65
- திருவண்ணாமலை - 114
- வேலூர் - 145
- திருநெல்வேலி - 66
- தேனி - 60
- ராணிப்பேட்டை - 76
- கன்னியாகுமரி - 97
- கோயம்புத்தூர் - 473
- திருச்சிராப்பள்ளி- 86
- கள்ளக்குறிச்சி - 59
- விழுப்புரம் - 36
- சேலம் - 322
- ராமநாதபுரம் - 15
- கடலூர்- 138
- திண்டுக்கல் - 49
- தஞ்சாவூர் - 242
- சிவகங்கை - 30
- தென்காசி - 10
- புதுக்கோட்டை - 78
- திருவாரூர் - 104
- திருப்பத்தூர் - 76
- அரியலூர் - 35
- கிருஷ்ணகிரி -72
- திருப்பூர் - 182
- தர்மபுரி - 82
- நீலகிரி - 106
- ஈரோடு - 149
- நாகப்பட்டினம் - 52
- நாமக்கல் - 144
- கரூர் - 60
- பெரம்பலூர் - 7
TAGGED:
தமிழ்நாடு கரோனா பாதிப்பு