சென்னை: கேரளா மாநிலம் இடுக்கி நிலச்சரிவு சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதலமைச்சர் கே. பழனிசாமி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.
கேரளாவின் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்த நிலையில், அனைவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.