தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களின் தற்போதய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பெரு முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும், தொழில் முதலீடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் இந்த குழு ஆலோசனை நடத்தியது.
முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஒற்றைச் சாரள முறையில் நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் குழுமத்தால் வழங்கப்படும் அனுமதி போன்றவைகளை துரிதப்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இக்கூட்டத்தில், உயர்நிலை அதிகாரக்குழு உறுப்பினர்களான துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பாஜக அரசு போல பழிவாங்கும் அதிமுக அரசு: சாடும் நாராயணசாமி