சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடந்த இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், இதுவரை 4.7 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் வனப் பரப்பளவு அதிகரித்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.