நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்கஇருக்கிறது. இந்தத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சியினரும், ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என பாஜகவினரும் வியூகங்களை வகுத்துவருகின்றனர். அதற்காக 'பற்பல' பணிகளையும் அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.
புதிய அவதாரம் எடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர்கள் - சவுக்கிதார்
சென்னை: பாஜக தேசிய தலைவர்களை அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர்களும் ட்விட்டரில் தங்கள் பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' என்ற சொல்லை இணைத்துக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது அனைவரிடத்திலும் ஒரு அங்கமாக இருக்கும் இணையத்தை பாஜக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. அதன்படி நேற்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ட்விட்டரில் தங்களது பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' (மக்கள் பாதுகாவலர்) என்ற சொல்லை இணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர்களான தமிழிசை, ஹெச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ட்விட்டரில் தங்கள் பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' என்ற சொல்லை இணைத்துக்கொண்டுள்ளனர்.