இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 2021 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்குரிய விண்ணப்ப படிவங்களை வரும் நவம்பர் 16ஆம் தேதிமுதல் டிசம்பர் 15ஆம் தேதிவரை பூர்த்திசெய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைகள் அனைத்தும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் உதவிஅலுவலரிடம் வேலை நாள்களில் பூர்த்திசெய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்களை அளிப்பதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். வாக்காளர்கள் விண்ணப்பப் படிவத்துடன் முகவரிச் சான்று, வயது ஆகியவற்றுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.