சென்னை:கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் காணொலியில், “45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் அரசு பல வழிமுறைகளை மேற்கொண்டுவருகிறது. முடிந்தவரையில் அனைவருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டிவருகிறது.
மேலும், கரோனா தடுப்பு முறைகளை முறையே பின்பற்ற மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.