தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 26) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நாளை (மார்ச் 27) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச் 28) ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு உள் மாவட்டங்களில் வருகின்ற 29ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.