தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - ஸ்டாலின்
Lock down Extends next one week
12:56 July 10
தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு (ஜூலை 19) நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதில், ஜூலை 12 முதல் 19ஆம் தேதி வரையுள்ள கட்டுப்பாடுகள்:
- புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
- உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள் தவிர விமானப் போக்குவரத்துக்கு தடை
- திரையரங்குகள், மதுக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
- பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்கும் தடை
Last Updated : Jul 10, 2021, 1:24 PM IST