தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Covid-19 Vaccine Update: தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் இவ்வளவா? - 11ஆவது மெகா கோவிட்-19 தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 11ஆவது மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 12.01 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும், இதுவரை தமிழ்நாட்டில் முதல் - இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 vaccination update
Covid-19 vaccination update

By

Published : Nov 26, 2021, 6:49 AM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன.

இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி முதல் - இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற பத்து மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 94 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக 18 மாவட்டங்களில் மழை பெய்த போதிலும், நேற்று (நவம்பர் 25) நடைபெற்ற 11ஆவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 12 லட்சத்து ஆயிரத்து 832 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 969 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக ஏழு லட்சத்து 48 ஆயிரத்து 863 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 77.02 விழுக்காடு முதல் தவணையாகவும், 41.60 விழுக்காடு இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மா. சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க: Covid19: அதிகரித்த இறப்பு விகிதம் - 739 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details