தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பகிங்ஹாம் ஆக்கிரமிப்பாளர் வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம் - பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் பகிங்ஹாம் கால்வாய்யை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கின.

வீடுகள் இடிக்கும் பணி
வீடுகள் இடிக்கும் பணி

By

Published : Apr 30, 2022, 7:20 PM IST

சென்னை:ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் உள்ள 259 வீடுகள் பகிங்ஹாம் கால்வாய்யை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பல்வேறுகட்ட விசாரணைகளுக்கு ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை அப்புறப்படுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுமட்டுமல்லால் இவர்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி வீடுகளை இடிக்கு பணி
இதனிடையே நேற்று (ஏப். 29) ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டம் கலைக்கப்பட்டது. அந்த வகையில், இன்று (ஏப்.30) பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் வீடுகளை இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதையும் படிங்க: 'எங்களுக்கு ஓட்டுப்போடுங்க பட்டா தர்றோம்னு சொன்னாங்க... இப்போ, எங்களை துன்புறுத்திட்டாங்க..'

ABOUT THE AUTHOR

...view details