சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாக, ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டு, நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.
ஆளுநரை திரும்பப்பெற எழுந்த கோரிக்கை
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.