தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு - பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரை
தமிழ்நாடு அரசு

By

Published : Jan 30, 2022, 4:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மெரினா, பெசன்ட் நகர் உள்பட சென்னையில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா நோய் பரவல் குறைந்து வருவதால், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரை செல்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் கொஞ்சம் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து ஊரடங்கு உத்தரவை ரத்து செய்துள்ள நிலையில், கடற்கரைகளில் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் கடற்கரைகளில் கூட்டமாக கூட கூடாது, முகக்கவசம் அணிந்து விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும், விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் இயந்திரத்தில் கோளாறு - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details